• சற்று முன்

    அருப்புக்கோட்டையில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் மீது போக்சோ வழக்கு.....

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் போஸ் (65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 1098 என்ற இலவச தொலைபேசியில், இது குறித்து புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முதியவர் போஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad