• சற்று முன்

    கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் - கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் தர்மராஜ் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.. இவரை பணி நீக்கம் செய்வதற்கு அதிகாரிகளை தூண்டி விட்ட முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரை கண்டித்து சோழபுரம் கண்ணகட்டை, புங்கவர்நத்தம், லக்கமா தேவி, தளவாய்புரம், உள்ளிட்ட 5 கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் அதிமுக கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் முனியசாமி தலைமையில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தர்மராஜை உடனடியாக மீண்டும் பணியமர்த்த வேண்டும்.. 



    என்று கூறி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவுச் செயலாளரை மீண்டும் பணி அமர்த்த படவில்லை என்றால் கோவில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad