சாத்தையாறு அணை மதகு பழுது: உடையும் அபாயம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மேற்கே உள்ள சாத்தியார் அணையாகும். இதன் கொள்ளளவு 29 அடி, நேற்றைய வரை 26 அடி தண்ணீர் இருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இரவு திடீரென பெய்த மழை காரணமாக காற்றாற்று வெள்ளம் சூழ்ந்து அணை நிரம்பியது. இந்த அனைத்து மூன்று மதகுகள் உள்ளன. இதில், ஒன்று பழுதாகி தண்ணீர் 100 கண்ணாடி நீர் வெளியேறி கொண்டு வருகிறது. பொதுப்பணி துறையில் துறை அதிகாரிகள் அலட்சியத்தால், நீர் வெளியேறுவதால் விவசாயிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் பதாகியுள்ள மதகின் சட்டத்தை உடனே சரி செய்து, நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை