• சற்று முன்

    மதுரை கருப்பாயூரணி மஸ்தான்பட்டியில் கால்நடை துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சிறப்பு மருத்துவ முகாமில்  682 கால்நடைகளுக்கு சிகிட்சைஅளித்து மருந்துகள் வழங்கப்பட்டது. மதுரை கருப்பாயியூரணி மஸ்தான் பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மலடு நீக்க சிகிட்சை முகாம் நடைபெற்றது.

    இதில் கால்நடை மண்டல இயக்குநர் நடராஜ குமார்,உதவி இயக்குநர் சரவணன், கிரிஜா , கால்நடை உதவி மருத்தவர்கள் டீனா மோனிஷா, அமீனா மற்றும் கால் நடை ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    மஸ்த்தான்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாமில் 'கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல், மடி நோய் மற்றும் குடற்புழு நீக்கம் , நவீன சினை பிடிப்பு, கன்று வளர்ப்பு மற்றும் தாது உப்பு வழங்குதல், தீவன பயிர் விதைகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் 363 மாடுகள்.221 ஆடுகள், 67 கோழிகள் , 31 நாய்கள் உள்ளிட்ட 682 கால்நடைகளுக்கு சிகிட்சையளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாடுகள் வளர்த்த உரிமையாளர்கள் 3 பேருக்கும், சிறந்த ஆரோக்கியமான கன்றுகள் தேர்வு செய்து 3 பேருக்கு பரிகள் வழங்கப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad