Header Ads

  • சற்று முன்

    மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட மேல அண்ணாதோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து குழந்தைகளுடன் அமர்த்து உணவு அருந்தினார். இதனை தொடர்ந்து நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி என்ற புத்தகத்தை வெளியிட்டு முதல்பிரதியை சமூக சேவகி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.

    இதில் அமைச்சர்கள் ஏ.வே.வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, கணேசன், பி.டி.ஆர்.,பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், சமூக சேவகி கமலாத்தாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் முன்னதாக நெல்பேட்டை பகுதியில் காலை உணவுத்திட்டற்கான சமையல்கூடம் மற்றும் உணவு எடுத்துசெல்லும் வாகனங்களை நேரில் பார்வையிட்டு வாகனத்தை தொடங்கிவைத்தார்.

    இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் என் வாழ்வின் பொன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது, பசித்தோறுக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் இத்திட்டம், பள்ளிக்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவை வழங்கி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம், இந்த ஆண்டு. தமிழகத்தில. தானிய உற்பத்தியில் சிறந்து விளங்குகிறோம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளின் ஆதி மூலத்தை கண்டறிவதற்காக இந்த ஆதி மூலம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை தொடங்கிவைத்தது பெருமை அளிக்கிறது, ஆயிரம் விளக்கு பகுதியில் தொடங்கிய இது போன்ற திட்டம் நூற்றாண்டு முடிந்து தூங்க நகரில் விரிவடைந்துள்ளது, பள்ளி காலை உணவு வழங்குவதால் கற்றல் மேம்பாடு, பள்ளிக்கு வருகை ஆகியவை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

    காலை உணவுகளை மாணவர்கள் உண்ணும்போது மனம் நிறைந்த்து, இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது, சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது., பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிவருகிறேன்,்மணிமேகலையின் அமுத சுரபி போல இந்த ஆட்சியை பயன்படுத்தி் பணியாற்றிவருகிறோம், தமிழக மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக இத்திட்டத்தை தொடங்கவைத்துள்ளேன்

    ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது, 1971 காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கிய பின்னர் திமுக தொடர்ந்து நிறைவேற்றியது, குழந்தைகளுக்கும் பேபி ரொட்டியை குழந்தைகளுக்கு வழங்கியவர் கருணாநிதி, அதிக மையங்களை உருவாக்கி கூடுதல் நிதியை ஒதுக்கியவர் எம்.ஜி.ஆர் எம்.ஜிஆரின் சத்துணவுத்திட்டத்தை கலைஞர் ஆட்சியில் முடக்குவதாக கூறிய நிலையில் முட்டை, பயறு உள்ளிட்ட சத்தாண சத்துணவுகளை வழங்கி திட்டத்தை மேம்படுத்தியவர்,  ஜெயலலிதா அவர்கள் மதிய உணவை கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்.

    சென்னையில் ஆய்வின் போது மாணவர்களை சந்தித்து கேட்டபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு காலையில் பள்ளிக்கு வருவதை உணர்ந்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்துள்ளேன். 1, 14ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் , 1545 பள்ளிகளுக்கு தலா 12.75 காசு வீதம் , இதற்கான நிதி என்பது எனது கடமை இதை மேம்படுத்த இந்த திட்டத்தை சலுகை, இலவசம் என எண்ணக்கூடாது, இது அரசின் கடமை, பசிபிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள் இதனால் கல்வி மேம்படும், இதற்கான நிதியை செலவாக நினைக்கவில்லை, இத்திட்டத்தில் பயன்பெறும் 

    இத்திட்டத்தை ஆட்சியின் முகமாக பார்க்கிறேன் இந்த ஆட்சியை கருணையின் வடிவமாக அமையும், தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும், ஆசிரியர்கள் பணியாளர்கள. உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்குங்கள். கல்வி போராடி பெற்ற உரிமை,்கல்வி உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து என நன்கு படிக்க வேண்டும், நன்கு படியுங்கள், படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள், நீங்கள் படியுங்கள் நான் இருக்கிறேன். பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad