Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து காலி குடங்களுடன் போராட்டம் நடத்திய கிராம பொதுமக்கள்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி.ஒன்றியம் ரிஷபம் ஊராட்சியில் ஒன்று இரண்டு மற்றும்.மூன்றாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.  மழைக்காலங்களில்.குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் புகுந்து நோய் தொற்று பரவும் அபாயமம் ஏற்படுவதாகவும் தெருவிளக்குகள்  முறையாக பராமரிக்கப்படாததால் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும்  இதனால் பாம்பு பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள்.குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. இது குறித்து  ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக தேர்தலில் தனக்கு வாக்களிக்காத ஒன்று இரண்டு மற்றும் மூன்றாவது வார்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரமாட்டேன் என்றும் கூறுகிறார் .

    ஆகையால் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். அடிப்படை வசதிகளான கழிவுநீர் சாக்கடை குடிநீர் தெரு விளக்குகள் உள்ளிட்டவைகள் செய்து தர கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி அரசியல் பாகுபாடு பார்ப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும். இது தொடர்ந்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad