ராஜபாளையம் அருகே சோக சம்பவம்... மனைவி இறந்த துக்கத்தில், கணவர் விஷம் குடித்து தற்கொலை.....
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (29). இவருக்கும் அதே பகுதிரைச் சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடந்திருந்தது. இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட ராமசாமியின் மனைவி, திடீரென்று இறந்து போனார். அன்று முதல் மனைவியின் நினைவாக கடும் சோகத்தில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள், அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி,
சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை