Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.....

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஏற்கனவே மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 நபர்களுக்கு மாவட்டத்தில்  இயங்கி வரும் விடுதிகளில், தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியின் போது உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு, கருணை அடிப்படையில் அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டது. 



    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) (பொ) சங்கரநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர்  உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    .செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad