மதுரை விமான நிலையம் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 பேர் தப்பித்து ஓட்டம் -ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
அவனியாபுரம் போலீஸார் விசாரணை . தப்பி ஓடிய 6 பேரை போலீஸார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருகின்றனர். மதுரை விமான நிலையம் அருகே உள்ள மது, மற்றும்போதை வஸ்த்துகளுக்கு அடிமையானவர்களுக்காக மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது .
இந்த மையத்திலிருந்து இன்று அதிகாலை 7 பேர் தப்பித்து ஓடினர். இதில் திருமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கருப்பையா (45) மறுவாழ்வு மையத்தின் 500 மீட்டர் தூரத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து இப்பகுதி மக்கள் அவனியாபுரம் காவல்துறைக்கு தகவல் தரவே அவனியாபுரம் போலீசார் விரைந்து சென்று கருப்பையா உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மறுவாழ்வு மையத்தில் இருந்த ஹசன், வேல்முருகன், மணிகண்டன்,மோகன், லோகேஷ், அலெக்சாண்டர் ஆகிய ஆறு பேர் மற்றும் இறந்து கிடந்த கருப்பையா உள்ளிட்ட ஏழு பேர் அதிகாலை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் ஹாசன்,வேல்முருகன், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் மற்ற மூன்று பேர் இன்னும் அவர்களது வீட்டிற்கு செல்லவில்லை என்பது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் கருப்பையா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து மறுவாழ்வு மைய உரிமையாளரிடம் போலீசார் தீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த நபர் தப்பி சென்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை