Header Ads

  • சற்று முன்

    திமுக MP ஆர்.ராசாவுக்கு மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் P.குணா கண்டன அறிக்கை

    ஆர்.ராசா இந்துக்களை கொச்சை படுத்தி பேசுவது மத கலவரத்தை தமிழகத்தில் தூண்ட நினைக்கிறாரா நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்தால் அந்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை விட்டுவிட்டு தொடர்ந்து இந்துக்களை கொச்சையாக வசைபாடி வரும் திமுக எம்.பி ஆர்.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.  சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழாவில் ஆர்.ராசா இந்துக்களை இழிவாக பேசி இருந்தார். 

    ஆர்.ராசா வை உடனடியாக பதவியில் இருந்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  நடவடிக்கை எடுக்க வேண்டும். மு.க. ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின்  இறை பக்தி கொண்டவர். இந்து கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தான் வழிபட்டு வருகிறார். இந்து கடவுளை வணங்க கூடியவர்களை  இழிவு படுத்தும் விதமாக தான் ஆர்.ராசா  கொச்சையாக பேசி இருக்கிறார்.  திமுகவிலும்  இந்துக்கள்  இருக்கிறார்கள் ஆனால் எவரும் ஆர்.ராசா வின்  கொச்சை பேச்சுக்கு கேள்வி கேட்க திராணி இல்லாதவராக இருக்கிறார்கள். திமுக காரன் எவரும் இந்து கோவிலுக்கு வராதீர்கள்.  தேர்தல் நேரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திமுகவில் 90%  இந்துக்கள் இருப்பதாக கூறியது அவருக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை. தமிழகத்தின் ஜனாதிபதி அவர்கள் தான் திமுக எம்.பி ஆர்.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்து என்கின்ற விபசாரி மகனாக இருக்க விரும்புறீர்களா என கீழ்தரமாக பேசி இருக்கும் திமுக எம்.பி.ஆர்.ராசாவை பதவியில் இருந்து அகற்ற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இந்துக்களின் உணர்வுகளை வெளிபடுத்தும்  சூழ்நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக எச்சரிக்கை  விடுகின்றோம். இந்துக்கள் ஒன்றும் மானகெட்டவர்கள் இல்லை. இந்துக்களை சீந்தி பார்த்தால் தமிழகத்தில் முற்றுகை  போரட்டங்கள் , மறியல் போராட்டங்கள் போன்ற அறப்போராட்டங்களை நடத்த தயங்க மாட்டோம் என்பதை தமிழக அரசுக்கும் ஆர்.ராசாவுக்கும் தெரிவித்து கொள்கிறோம். 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad