Header Ads

  • சற்று முன்

    மதுரையில் எல்லிஸ் நகரில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் மகா ஸம்ப்ரோக்ஷணமஹா கும்பாபிஷேகம் கோலாலமாக நடைபெற்றது

    ஸ்ரீ ராமசுவாமிகளுக்கு அபிமான பூதரான ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கு  மதுரை எல்லீஸ் நகரில் கோவில் அமைக்கப்பட்டு அருள்பாளித்து வருகிறார். 

    இந்நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு கோவில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, பூமி பூஜை, அங்குரார்பணம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக யாகசாலை பிரவேசம், கும்ப, மண்டல, பிம்ப, அக்னி, திவார பூஜைகள் ஹோமங்கள் ஆகியவை நடத்தப்பட்டன.  இதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை தொடங்கி விமான மற்றும் மூலமூர்த்தி விநாயகர் சக்கரத்தாழ்வார் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் 9 கலச திருமந்திரம் நடத்தப்பட்டது.  

    இதனை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால, யாக சாலை பூஜைகளை தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் மங்கள வாத்தியங்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் சுற்றி வலம் வந்து கோபுர கலசம் மற்றும் மூலமூர்த்தி, விநாயகர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது கும்பாபிஷேகத்தில் எல்லீஸ் நகர் சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad