மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிநீக்கம் செய்யப்பட்ட 136பேர் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொகுப்பூதிய பணியாளர்கள்136பேர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 136 பேர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது சம்பந்தமாக பல்வேறு முறை தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தற்போது பல்கலைக்கழக வாயில் முன்பாக கொளுத்தும் வெயிலில் நிழற்குடை இல்லாமல் தொடர் 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி அமர்ந்து இருக்கிறார்கள். போலீஸ் தரப்பில் அனுமதி இல்லாமல் உண்ணாவிரத போராட்டம் நடப்பதால் நிழற்குடை க்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டனர்.
136 பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார். எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சாமியான பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து சாமியானா பந்தல் மற்றும் கொண்டு வந்த உபகரணங்களை வேனில் ஏற்றி அனுப்பி வைத்தது அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை