• சற்று முன்

    கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம்

    கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில்  தூக்கிட்டு தற்கொலை சம்பவம் - ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை 

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி ( அரசு உதவி பெறும் உண்டு உறைவிட  பள்ளி)  பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் ‌ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி சேர்ந்த ராமநாதன்,லதா தம்பதியினர் மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி அதே பள்ளி விடுதியில் தங்கி படித்துவருகிறார். 

    இந்நிலையில் மாணவி நேற்று இரவு பள்ளி கழிவறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறி வருகிறேன். மேலும் பள்ளியில்  பணியாற்றும் வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவியை திட்டி வந்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் திட்டியது காரணமா? இல்லை வேற எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுது வைத்த கடிதம்  போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.கோவில்பட்டி அருகே பள்ளி  மாணவி தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad