• சற்று முன்

    கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் , பைக் பறிமுதல் - 6 பேர் கைது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் கஞ்சா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கம் காரணமாக அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து எழுந்துள்ளது இதனை அடுத்த கோவில்பட்டி பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆம்னி காரை மறித்து சோதனையிட்டனர். இதில் 8 மூடைகள் புகையிலை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மூடைகளில் மொத்தம் 100 கிலோ புகையிலை இருந்தது, தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் 4 பேரும் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ஆறுமுகராஜ் (4), தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே ஒட்டநத்தத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கலையரசன் (28), கோவில்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் மாரியப்பன் (40), பசுவந்தனை அருகே சில்லாங்குளம், சுப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சண்முகையா (43) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 100 கிலோ புகையிலையையும், அதை விநியோகிக்கப் பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். புகையிலையின் மதிப்பு ரூ.3.50 லட்சம் 4 பேரும் ஆம்னி காரில் முக்கிய நகரங்களுக்கு சென்று பெட்டிக் கடைகளில் புகையிலை மூடைகளை விற்பனை செய்தது, தெரியவந்தது. இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் 4பேர் மீது வழக்கு பதிவு செய்து  வலிமறித்து சோதனை செய்வதில் பைக்கில் கொண்டுவரப்பட்ட 1 மூடை புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது பின்பு அவர்களை விசாரணை செய்து போது கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த தடி வீரசாமி 52, முகமது சாலியா புது கிராமத்தை  சேர்ந்த மாரியப்பன் வயது 54 , என தெரிய வந்தது உடனே அவர்களை கிழக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த பைக் மற்றும் புகையிலை பறிமுதல் செய்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad