Header Ads

  • சற்று முன்

    மதுரையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     


    மதுரை மாவட்டம் ஆண்டார்குட்டாரம் பகுதியில் உள்ள அய்யனார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்தப் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பகுதியான ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததோடு இரும்பு கதவு போட்டு சாலையை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடு அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில் ராணி மங்கம்மாள் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரின் மற்றும் வட்டாட்சியர் என பல்வேறு மனுக்களை கொடுத்த நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் இருந்து கருப்பாயூரணி செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad