• சற்று முன்

    சிவகாசி மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டில் மேயர், துணை மேயர் திடீர் ஆய்வு.....

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சிவகாசி, திருத்தங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தெருப்பகுதிகளில் கடை வைத்து சில்லறை வியாபாரம் செய்யும் காய்கறி வியாபாரிகள், இந்த மார்க்கெட்டில் தான் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருகின்றனர். அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள், காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின்போது மாநகராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad