Header Ads

  • சற்று முன்

    மதுரை மாநகர் உத்தங்குடி அருகே பழமையான ஊரணி ஆய்வு மேற்கொண்டு நீரை பரிசோதனை செய்தனர்.

    மதுரை மாநகர் உத்தங்குடி அருகே பழமையான  ஊரணி செயல்பட்டு வருகிறது.  இன்று ஊரணியில் இருந்த ஏராளமான மீன்கள் திடீரென மர்மமான முறையில் செத்து மிதந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு நீரை பரிசோதனை செய்தனர்.

    மேலும் ஊரணியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்  ஊரணியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சென்றுவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் எச்சரிக்கை பலகை வைத்து பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.

    இந்த ஊரணியில் நேற்று முன்தினம் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தற்போது மீன்கள் செத்து மிதப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவரின் உயிரிழப்பு குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad