அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இடைத்தரகரின்றி விற்பனை செய்வதால் ஆர்வம் -
வியாபாரிகள் நேரடியாக வந்து தரமான பொருட்களை குறைந்த விலையில் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் , திருமங்கலம் வட்டார பகுதிகளில் உள்ள லாலாபுரம் , உலகாணி, விடத்தகுளம் மேலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பருத்தி , நிலக்கடலை, துவரை, எள், பாசிப்பயறு, கடலைப்பருப்பு ஆகிய பயிர்களை , அந்தந்த கிராம விவசாயிகள் நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகரின்றி விற்றுச் செல்வதால் , அதிக லாபம் கிடைப்பதாகவும் ,
வியாபாரிகள் தரமான விலை விளைபொருட்களை பெறுவதாகவும், குறைந்த விலையில் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர் . இன்று ஒரே நாளில் நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு 91 ரூபாய் வீதமும், பருத்தி கிலோ ஒன்றுக்கு நூத்தி மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதால் , ஒரே நாளில் 2 லட்சம் பெறுமானமுள்ள விளைபொருட்கள் விற்பனையாகி உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை