சுதந்திர தின விழா முன்னிட்டு பம்மலில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சத்யா நகர் பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சத்யா நகர் இளைஞர்கள் இணைந்து ஆர்.கே கார்த்திக் அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் பம்மல் நகர மன்ற துணைத் தலைவர் அப்பு என்கின்ற வெங்கடேசன் மற்றும் பி.எஸ் முருகேசன் அவர்கள் சிறப்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் தியாகு சிவா மற்றும் நியூ வெல்டன் பாய்ஸ் குழுவினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
கருத்துகள் இல்லை