• சற்று முன்

    கோவில்பட்டி அருகே மூதாட்டியின் வீட்டில் தீ பற்றி எரிந்து முற்றிலும் சேதம்-ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி செல்வி. (75) வயதான மூதாட்டி  செல்விக்கு திருமணமாகவில்லை  தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

    இந்த நிலையில் மூதாட்டி செல்வி இல்லாத சமயம் அவரது வீட்டில் தீப்பற்றி  அவரது வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.  அருகிலுள்ள அக்கம் பக்கத்தினர் வந்து  தீயினை அணைத்தனர்.  மேலும் மூதாட்டி செல்வி  தனது இல்லத்தை புதுப்பித்து தரவேண்டியும் முதியோர் உதவித்தொகை வழங்கிடவும்  துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்னால் பெய்த மழையினால் வீட்டில் பின்பக்கத்தில் உள்ள சுவர் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது இருப்பினும் அதே வீட்டில் வசித்து வந்த செல்வி தற்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள தென்ன ஓலையில் தீப்பற்றி எரிந்தது  குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad