• சற்று முன்

    183.வது ஆண்டு உலக புகைப்பட தினம் விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.


    183.வது ஆண்டு உலக புகைப்பட தினம் விழா முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில் இன்று 183.வது ஆண்டு உலக புகைப்பட தினம் பேரணி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்றது. பேரணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மூத்த புகைப்பட கலைஞர்களை கௌரவப்படுத்தி சிறப்பித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் நகர மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள்  வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க நிர்வாகிகள் கௌரவ தலைவர்  பிச்சையா, தலைவர்  ராமச்சந்திரன், செயலாளர் துரைராஜ்,பொருளாளர் ராமர், துணைத் தலைவர் ஜி.எம் மாரியப்பன், துணைச் செயலாளர் முருகன், உள்ளிட்ட அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரன், செண்பக மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் மாவட்ட அணி செயலாளர் சிவபெருமான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,  வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,  பழனி குமார்,கோபி, முருகன், உள்பட கழுகுமலை போட்டோ வீடியோ மற்றும் ஒளிப்பதிவார்கள் சங்கம் மற்றும் எட்டையாபுரம், பசுவந்தனை, விளாத்திகுளம், மற்றும் சுற்றுவட்டார பகுதி பட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad