திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்மொழி, அரசாங்க வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு கண்டித்து திராவிட கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்மொழி அரசாங்க வேலைவாய்ப்பில்தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் இந்தியை திணிப்பது, வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிப்பது, வங்கிப் பணிகளில் அரசாங்க வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை