திருப்பத்தூரில் தமிழ்நாடு பொது நூலகத் துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தண்டபாணி கோயில் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பொது நூலகத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக அரசாணையின் 151ன் படி மாற்றுத்திறனாளி ஊர்ப்புற நூலகருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் அனைத்து நூலகத்திலும் அடிப்படை வசதிகளான கழிப்பறை சாய்வு தளம் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் ஒன்பது வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன
மேலும் இந்த கூட்டத்தில் மாநில தலைவர் சரவணன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தலைமை நூலகத்தின் நூலகரும் மாநில துணைத்தலைவர் பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை