Header Ads

  • சற்று முன்

    38 ஆம் ஆண்டு ஜீவ ஜோதி தொடர் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி அருகே கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணி மண்டபத்தில் 38 ஆம் ஆண்டு ஜீவ ஜோதி தொடர் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 66 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணி மண்டபத்தில் வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி சார்பாக 38 ஆம் ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டம் கயத்தாறில்  இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை  ஜீவஜோதி ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜீவஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி சீனிவாச நகர் பகுதியில் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பாக தொடர் ஜீவஜோதி ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் காளிபாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் பாலமுருகன் என்ற விஜி,கடம்பூர் மாயாதுரை, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்  கோவில்பட்டி அ.சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad