கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் வைகாசி மாதம் கோடை விழா முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் தீர்த்த கும்பம் எடுத்து வந்து ஸ்ரீ காளியம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் திருவள்ளுவர் மன்றம் தலைவர் கருத்த பாண்டியன், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் இயக்க நிறுவனர் செல்வத்தேவர், தலைமையில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,16 வது வார்டு செயலாளர் ரமேஷ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் முருகன், மனோகரன், பழனிமுருகன்,பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை