• சற்று முன்

    கோவில்பட்டியில் அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

    அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கத் தலைவர் சங்கீதா தலைமையில் துணைத் தலைவர் டேவிட், தமிழ்நாடு பிரிவு தலைவர் அனு ஆகியோர் முன்னிலையில்.முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார். அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பேசுகையில், பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைப்பது முடி மற்றும் அழகு நிலையக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

    இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தங்கள் கோரிக்கையை எழுத்து மூலமாக அளித்தால் அதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் கல்லூரி தொடங்க முடியாவிட்டாலும் கூட இதற்கான பாடப்பிரிவுகளை தொடங்க தமிழக அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என்றார் அவர். 

    நிகழ்ச்சியில் முடி மற்றும் அழகு நிலைய நிர்வாகிகள் நிர்மலா தேவி, ஜான்பீட்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,பாஜக நகர செயலாளர் ராமகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் முருகன்,மனோகரன்,பழனிகுமார், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad