கழிவு நீர் தேங்கும் அம்மா உணவகம் - அலட்சியம் காட்டும் கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரியம்
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு வார்டு42ல் உள்ள அம்மா உணவகத்தின் வளாகத்தின் உள்ளே பல நாட்களாக அங்குள்ள கழிவுநீர் வடிகாலிள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துற்நாற்றம் வீசிவருகிறது என பொதுமக்கள் புகார்.
இதனால் அம்மா உணவகத்தின் உள்ளே உணவருந்தவரும் பொதுமக்கள் கழிவுநீரை கடந்து சென்று துற்நாற்றம் வீசிவரும் அவ்விடத்தில் அங்கேயே அமர்ந்து உணவை சாப்பிட்டு வருகின்றனர். சுகாதாரமற்ற அவ்விடத்தில் உணவருந்துவதால் தொற்று ஏதேனும் ஏற்படவாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மிகுந்த அச்சபடுகின்றன.
எனவே சம்மந்தபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,கழிவுநீர் வடிகால் வாரியம் மற்றும் 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவனத்தில்கொண்டு உடனடியாக கழிவுநீர் வடிகால் அடைப்பை சீற்செய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்
கருத்துகள் இல்லை