• சற்று முன்

    கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு

    கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு  சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு _ தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கோட்டாட்சியர் முன்னிலையில் விளக்கமளித்த மாவட்ட செயலாளர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் அப்பகுதியில்  தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம்  என்ற பெயரில் பதிவு செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அச் சங்கத்தை 12 ஆண்டுகள் மேலாக நடத்தி  சமுதாய பணிகளை  மேற்கொண்டு வருகிறார்.



    இந்நிலையில் அதே பகுதியில் மாடசாமி என்பவர் புதிதாக சங்கத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் காளி முத்து என்பவர்  அப்பகுதி உள்ள மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி நலத்திட்டங்களை செய்வதாக கூறி பணம் பறிப்பதாகவும் இவர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி மனு  அளிக்கப்பட்டது பெறபட்ட  இப் புகார் மனுவின் மீது  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன் தலைமையில் உரிய விசாரணை நடத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காளி முத்து  விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 

    இன்று தனது சமுதாய மக்களுடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்த காளி முத்து தம் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அளித்த புகாரில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று கோட்டாட்சியரிடம் அவர் விளக்கமளித்தார் மேலும் காளி முத்து மற்றும் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து அவருடைய ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad