• சற்று முன்

    கோவில்பட்டி அருள்மிகு மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 13-ஆம் தேதி அன்று நாட்டுகால் நடுதல் திருவிழா தொடங்கியது. 

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழா நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜய பாண்டியன், துணை நகர செயலாளர் மாதவராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, வணிக வைசிய சங்க தலைவர் வி.எஸ்.எஸ் வெங்கடேஷ், முன்னாள் துணைச் சேர்மன் ரத்தினவேல், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், கிளைச் செயலாளர் பொன்ராஜ், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.பி.ராமர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி,  மற்றும் அதிமுக நிர்வாகிகள் முருகன், பழனிகுமார்,கார்த்தி,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad