புதுப்பேட்டையில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டையில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44வது புதிய கிளையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் சிறுவணிகக் கடன் 5 நபர்களுக்கு தலா 25000,மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் 5 நபர்களுக்கு தலா 25000 என 10 நபர்களுக்கு கடன் உதவியை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்,மேலாண்மை இயக்குநர் கோமதி,திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை