• சற்று முன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் கைது

    அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நலத்திட்ட உதவிகளை தற்போதைய திமுக நிறுத்துவதாக குற்றஞ்சாட்டி அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே சி.வி.சண்முகம் தலையில் கூடிய அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் உட்பட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அறிவிக்கப்பட்ட பல்கலைகழகத்திற்கு திமுக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார் சி.வி.சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad