• சற்று முன்

    மணப்பாறை மையப்பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

    மணப்பாடு கோவில்பட்டி சாலையில் உள்ள ஆர்விபி மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணப்பாறை ஒன்றியம் வையம்பட்டி ஒன்றியம் மருங்காபுரி ஒன்றியம் மணப்பாறை நகரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  இடை குழுக்கள்  கூட்டம் நடைபெற்றது

    இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார் நகர செயலாளர் ஜனசக்தி உசேன் ஒன்றிய செயலாளர் தங்கராசு வையம்பட்டி ஒன்றிய செயலாளர் ஏ.டி சண்முகானந்தம் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் வெள்ள கண்ணனு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித்  மே தின அரசியல் உரை நிகழ்த்தினார் 

    மணப்பாறை தொகுதிக்கு  அரசு அறிவித்துள்ள கலை அறிவியல் கல்லூரி மணப்பாறை மையப் பகுதியில் அமைக்க வேண்டும் இந்த ஆண்டு கல்லூரியை மணப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில்  தொடங்கிட தமிழக அரசுக்கு வலியுறுத்தியும் 

    மணப்பாறையில் அமைய உள்ள புறவழிச்சாலையை சீகம்பட்டி, முச்சந்தி அருகில் உள்ள பெட்ரோல்  பேங் பகுதி, உசிலம்பட்டி தெற்குப்பகுதி, வண்ண குளத்துப்பட்டி, பொண்ணம்பலதான்பட்டி, கீழே பொய்கைபட்டி, பூல ஊரணி பட்டி,பொய்கை மலை தெற்கு புறம்,  தொப்பம்பட்டி, கல்பலத்தான்பட்டி, நாயமா கோவில், மலையடிப்பட்டி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைக்க தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

    புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஆர் பழனிச்சாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் சவுக்கத்அலி ரஹ்மத் துணிசா சுப்பிரமணியின் ராஜேந்திரன்  பிரேமா ஹக்கீம் சேட் ரவிச்சந்திரன் பெருமாள்  கணேசன் ஆறுமுகம் துரைராஜ் டிஆர் ஜெயலட்சுமி நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி தங்கராஜ் சிராஜ்தீன் குருசாமி பிச்சை கண்ணு பொன்னுச்சாமி மரிய ராஜ் கல்யாணசுந்தரம் சின்னத்துரை சின்னக்கண்ணு துரைசாமி கமலக்கண்ணன் கண்ணுச்சாமி உட்பட அனைத்து இடைக்குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad