Header Ads

  • சற்று முன்

    மேல்பாடி பராந்தர சோழர் மன்னரால் கட்டப்பட்ட சிவன் சன்னதா

    வேலூர் மாவட்டம் காட்பாடி ஆந்திர எல்லை பகுதியில் நீவா நதி என்ற பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழர் மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழர் மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்டு மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தின் மீது சூரிய ஒளியானது மார்ச் மாதம்21ஆம் முதல் 24 தேதி வரை நேரிடியாக விழுவது அதிசியக்கத்தக்கது. சிவபெருமானின் துணைவியார் தபஸ்கிருதாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின் தென் திசையில் 200 அடி தூரத்தில் ராஜராஜன் சோழரின் பாட்டனார் ஆரூர் துஞ்சிய தேவன் கல்லரையமைந்துள்ளது. 1014ல் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இத்திருக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இத்திருக்கோவிலுக்கு செல்ல வேலூரிலிருந்து பொன்னை செல்லும் மார்கத்தில் மேல்பாடி என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். அல்லது இரயிலில் வருவதாக இருந்தால் காட்பாடியில் இறங்கி அங்கிருதந்து மேல்பாடி என்ற இடத்திற்கு சென்று தரிசிக்கலாம்.



    .


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad