தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ஏஐடியுசி சார்பில் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் டி.இராமசந்திரன் எம்எல்.ஏ. தமிழ்நாடு ஏஐடியுசி பொது செயலாளர் டி.எம். மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி, ஆர்ஆறுமுகம், சம்மேளன பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,சிற்றூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,, தூய்மை காவலர்கள்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள், தெரு விளக்கு பராமரிப்பு பணியாளர்கள் உட்பட 3000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கருத்துகள் இல்லை