உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் சார்பாக தாம்பரம் ஆர்.டி.ஓ.முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
லஞ்சம் வாங்கிய குற்றசாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துறை DTC நடராஜனை கைது செய்யக்கோரி உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் தாம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
35 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்ற கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அவர்களை கைது செய்யக்கோரியும் போக்குவரத்து துறையில் லஞ்சம் ஊழல் இடைத்தரகர்கள் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜாஹீர் ஹீசைன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு தங்களது கோரிக்கைகளை போக்குவரத்து துறை ஆணையர் வாயிலாக முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றி தரும்படி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தனர்.
Super anna
பதிலளிநீக்கு