உரிமைகுரல் ஓட்டுநர் சங்கம் சார்பாக சேலம் ஆர் டி ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சேலம் மாவட்டம் சார்பாக *மாவட்ட செயலாளர் திரு சி.மா.கைலாஷ் அவர்களின் தலைமையில்*
சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் *மாநில துனை தலைவர் திரு மா.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்*.
1.அரசுப் போக்குவரத்து துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து
2.போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை பணிநீக்கம் செய்யக் கோரியும்
3.டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தும்
4. இரு சக்கர பைக் டாக்ஸி முறையை ரத்து செய்ய கோரியும்
5. டாக்ஸி மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்யக் கோரியும்
6. மேக்சி கேப் பெர்மிட் உயர்த்தி வழங்கிடவும்
7. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும்
8. சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதையும் எதிர்த்து கோசம் எழுப்பப்பட்டது.
சேலம் மாவட்ட போக்குவரத்து ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.
உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு