Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகேமுன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


    கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூபாய் 11 லட்சம் 72 ஆயிரம் மதிப்புள்ள திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகு மலையில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை மற்றும் ராமநாதபுரத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் 72 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், அவர்களின் ஆச்சி உணவகத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட குழு தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,மாவட்ட கவுன்சிலர் பிரியா குரு ராஜ், முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, கிளைச் செயலாளர்கள் பைரவசாமி, நாகராஜ்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad