Header Ads

  • சற்று முன்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் பங்குனி திருவிழா

    கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்‌.

    தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி இத்திருவிழா 13 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறந்து திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடக்கப்பட்டு காலை 6 மணிக்கு மேல் சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும், வைரத் தேரில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன்எழுந்தருளுதலைத் தொடர்ந்து 11.30 மணிக்கு மேல், தேரோட்டம், நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, கழுகுமலை பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்ரமணியன்,திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளரும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் முருகன், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட குழு தலைவி சத்யா, அதிமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், திமுக பேரூராட்சி கழக செயலாளர் கிருஷ்ணகுமார்,திமுக 9வது வார்டு உறுப்பினர் ஜெயக்கொடி, தொழிலதிபர் முத்தால்ராஜ், கிருஷ்ணா சிட்பண்ட்ஸ் மாரியப்பன், பிரதோஷ குழு முருகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து பங்குனி உத்திர தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர், தெற்கு ரதவீதியில் இருந்து புறப்பட்டு கீழ பஜார் வழியாக நிலையத்திற்கு மாலை 7 மணிக்கு வந்தடைந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்களுக்கு சமுகஆர்வலர்கள் பலர் நீர்மோர் வழங்கினர், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார 23 கிராமங்களிலிருந்து பொது மக்களும் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடந்தது. 10ம் திருவிழாவான இன்று தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசுக் காட்சியும், நாளை(19ம் தேதி) இரவு 7.35 மணிக்கு மேல் திருக்கல்யான வைபவமும் நடக்கிறது. 20ம் தேதி பட்டினப் பிரவேசமும், மறுநாள் (21ம்தேதி) மஞ்சள் நீராட்டும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ராணி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித்  ஆனந் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad