கல்வி செல்வம் வேண்டி குழந்தைகள் நடத்திய பொங்கல் விழா
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மூக்கையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூப்பாண்டியபுரம் கிராமத்தில் கல்விச்செல்வம் பெறுக வேண்டி சிறுவர் மன்ற குழந்தைகள் சார்பில் ரோட்டடி முனியசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
இந்த விழாவானது சிறுவர் மன்ற தலைவர் செல்வி ஆ.சேர்மஜெயா தலையிலும், மாநில பனைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைச் சங்க தலைவலி ஏ.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது தனித்திறமைகளையும், குழந்தைகளின் ஒற்றுமை உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்கள்.
அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தனர். சிறுவர் மன்ற குழந்தைகளுக்கு பொங்கல் விழா ஏற்பாடுகளை ஆசிரியை சி.திருமணிச்செல்வி மற்றும் மாநில பனைத்தொழிலாளர் சங்கத்தின் கிளைச்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை