ஒளிமயமான எதிர்காலம் உருவாக பொங்கல் நன்னாளில் உறுதியேற்போம்: இந்திய தேசிய லீக்
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், மண்ணின் மகத்துவம், உழைப்பின் அருமை, கால்நடைகளுக்கு நன்றி செலுத்துதல், முன்னோர்களை வணங்குதல் என பல்வேறு சிறப்புகளுடன் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாண்பு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர வேண்டும்.
வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களும் பொங்கல் கொண்டாட உதவ வேண்டும். மக்களின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும்.
லஞ்சம், ஊழல், கடன், கருப்புப் பணம், வேலையின்மை போன்ற பழையன கழிந்து, வேலைவாய்ப்பு, தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் பொங்கலாக இந்தப் பொங்கல் அமைந்திட வேண்டுமென, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை இந்திய தேசிய லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனிருத்தீன் ஷெரீப்
மாநில தலைவர்
இந்திய தேசிய லீக்
கருத்துகள் இல்லை