Header Ads

  • சற்று முன்

    வாய் சொல்லில் வீரரடி .....

     "தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    * " பத்திரிக்கையாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்படும்" என்று அரசு அறிவித்துள்ளது.

    ஆஹா!  உயர் நீதிமன்றத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வு என்று எண்ணத்தோன்றும்!

    பத்திரிக்கையாளர்கள் மீது கரிசனத்தாலோ அல்லது பத்திரிக்கையாளர்கள் நலன் கருதியோ இந்த உத்தரவும் அறிவிப்பும் வந்துவிடவில்லை. பொதுவாக பத்திரிக்கையாளர்களின் நலத் திட்டங்கள் யாவும் யாராலும் அள்ளிக் கொடுத்தது  இல்லை. கில்லிக் கொடுத்த திட்டங்கள்தான்.  அதுவும் பத்திரிக்கையாளர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து போராடிபப் பெற்றவைதான்என்பதை பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்ட இரண்டும் பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஆகும்.

    பத்திரிக்கையாளர்களின் நல வாரியம் கேரளாவில் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை ஒட்டித்தான் தமிழ்நாட்டிலும் கோரிக்கை எழுந்தது?

    21 12 2014 சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் 'தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் மாநில மாநாடு நடந்தது. அந்த அமைப்பில் நான் மாநில துணைச் செயலாளராக பணியாற்றினேன். அந்த மாநாட்டில் 'பத்திரிக்கையாளர்கள் நலவாரியம்' குறித்தும் 'தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்' குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    * " பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 'தனியாக நலவாரியம்' அமைக்கப்பட வேண்டும். பத்திரிகைகளுக்கு தரப்படும் மொத்த விளம்பரத் தொகையில் 2 சதம் பிடித்தம் செய்து நலவாரிய நிதியில் சேர்க்க வேண்டும். அரசும் ஒரு பங்கை செலுத்தி நலவாரிய நிதியை விரிவாக்க வேண்டும். அதிலிருந்து பத்திரிக்கை யாளர்களுக்கு பலன் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்”.

    இதுதான் தீர்மானத்தின் முழு வாசகம். இதேபோன்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * “தகுதியான திறமையான சமூகப் பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் களை உருவாக்கும் வகையில்...  ஆந்திரம், கர்நாடகாவில் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் 'பிரஸ் அகாடமி' வேண்டும். அத்துடன் 'இந்திய பிரஸ் கவுன்சில்' அமைப்பின் கிளையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

    இதுதான் தீர்மானத்தின் முழு வாசகம்.

    இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்ட 'பிரஸ் அக்காடமி' இன்னும் உருவாக்கப்பட வில்லை. தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்பதும் அமைக்கப் படவில்லை. அமைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது அவ்வளவுதான். அந்த மாநாட்டில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்த திராவிட கழக தலைவர் கி. வீரமணி அவர்கள்... 

    ” தீர்மானம் முழுவதையும் கூர்ந்து படித்தேன், பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்து தீர்மானங்கள் சிறப்பாக அமைந்துள்ளதது".

    .தீர்மானங்களை தயாரித்தவர்களுக்கும், நிறைவேற்றிய மாநாட்டுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்”  என்று பேசினார். தீர்மானங்கள் தயாரிப்பில் நானும் முக்கியப்பங்கு வைத்தேன்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad