அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக 73 வது குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக சங்கத்தின் பொது செயலாளர் ஆ.வீ .கன்னையா தலைமையில் சென்னை மூலக்கடை மேம்பாலம் அருகில் கொரோனா விழிப்புணர்வு முகாமை தென் இந்திய பொது நல சங்க தலைவர் P.V. ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் V. தங்கமணி தொடங்கி வைத்து பொது மக்களுக்கு கபாசுரக்குடிநீர், முகவசம், சானிடைசர் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் VKK.குமார், ஜெய், மாறன், BSNL ஏகாம்பரம், பட்மேடு குப்பன், ஆனந்தன் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவிற்கு பத்திரிக்கையாளர்களுக்கு விடுமுறை கிடையாது பல்வேறு பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து மூலக்கடை VKK மஹால் திருமண மண்டபத்தில் குடியரசு தின உரையை சங்க மாநில தலைவர் இளசை எஸ்.எஸ்.கணேசன் உரையாற்றினார், தொடர்ந்து தி.சு. குமார், பால்ராஜ், சார்லஸ், வழக்கறிஞர் ஆனந்த் உரையாற்றினார். சங்க நிர்வாகிகள், பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை