திருவண்ணாமலையில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் நேற்று 13.11.2021 மற்றும் இன்று 14.11.2021 வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் பதினெட்டு வயதிற்கு பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது.
உயர்திரு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அய்யா எ.வ. வேலு MLA அவர்களின் ஆலோசனையின்படியும் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே கம்பன் MD அவர்களின் ஆலோசனையின் படியும் நகர செயலாளர் திரு ப. கார்த்தி வேல் மாறன் EX.MC அவர்களின் தலைமையில் மற்றும் நகர துணை செயலாளர் மு. கருணாமூர்த்தி Ex.MC அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று சமுத்திரம் காலனி பகுதி மற்றும் எள்ளு குட்டை தெரு, திருமஞ்சனம் கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம் ஆகியன நடைபெற்றது இதில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பபாக செயல்பட்டனர்.
உடன் க. முரளி, வட்ட செயலாளர் மற்றும் வட்ட பிரிதிநிதி அ. தினேஷ். BA, அ. அண்ணாமலை மற்றும் வீராங்கன், மற்றும் படையப்பா, எ. ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினர்
கருத்துகள் இல்லை