Header Ads

  • சற்று முன்

    ஐந்து நாட்கள் பிறகு கடலுக்கு சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்


    *.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், மீன்வளத் துறை அனுமதி அளித்ததை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று மீன்வளத் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து 5 நாட்கள் கழித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் என்எம்எஸ் செய்திகளுக்காக ராமேஸ்வரம் செய்தியாளர் குழு.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad