Header Ads

  • சற்று முன்

    சொந்த செலவில் மக்கள் பணி : ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

    தனது சொந்த செலவில் மக்கள் பணி செய்துவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


    இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் இணைப்பு பாலம் உள்ளது. இந்த இணைப்பு பாலமானது கூரான்கோட்டை, அல்லிக்குளம், மறவர் கரிசல்குளம் உள்ளிட்ட 15 கிராமங்களை இணைக்கும் முக்கியமான பாலமாகவும் சாயல்குடி பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையாகவும் உள்ளது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பாலமானது 2018 - 2019ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து 26.62 லட்சம் செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 24.11.2020ல் அரைகுறையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் பாலத்தின் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.


    இந்த நிலையில் திமுக ஒன்றிய மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி முனியசாமி பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இளசு என்ற வீரபாண்டி அவர்களிடம் பாலத்தின் பயன்பாடுகளை நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பாலத்தின் பணிகள் நடைபெறும் அந்த இடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் பணிகளை நிறைவேற்றி தருவதாக உத்திரவாதம் கொடுத்ததுடன் உடனடியாக வேலைகளையும் துவங்கினார்.

    தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இளசு என்ற வீரபாண்டி அவர்களை அல்லிக்குளம் கிராம பொதுமக்கள் சார்பாக திமுக கிளைச் செயலாளர் அல்லிக்குளம் முனியசாமி நன்றி தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad