Header Ads

  • சற்று முன்

    தென்காசி மாவட்டம் ஸ்கைலைட் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தில் இலவசமாக தையல் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது :

    தென்காசி மாவட்டத்தில் மேலகரம் பகுதியில் மலையான் தெருவில் ஸ்கைலைட் சாரிடபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை மகப்பேறு நல மருத்துவர் டாக்டர் சாரதா தேவி MBBS.,DGO அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

    மேலும் பெண்களுக்கு தையல் பயிற்சி முடித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கி மருத்துவர் சாரதாதேவி அவர்கள் பேசுகையில் தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோணா லிருந்து  நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கம் அறிவுருத்தலின்படி எங்கு சென்றாலும் முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.,

    கூட்டம் உள்ள இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்து தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் கண்டிப்பாக அதிலிருந்து விடுபட இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் என கூறி விழிப்புணர்வு பற்றி விளக்கினார்.

    மேலும் முதலில் பெண்கள் தங்களிடம் உள்ள தயக்கத்தை கைவிட்டு தன்னம்பிக்கையுடன் பல்வேறு வித கைத்தொழில்களை கற்றுக்கொண்டு சுய தொழில் புரிந்து வருமானம் ஈட்டுவது சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் பெறலாம்..,அதுபோல் இங்கு தையல் பயிற்சி முடித்த பெண்கள் அனைவரும் சுய தொழில் புரிந்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பெருமையை சேர்த்திட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய தையல் பயிற்சி ஆசிரியை உஷா அவர்கள் பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில்  ஸ்கை லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக பொறுப்பாளர் சைலப்பன், நிறுவனர் ராதா, செயலாளர் நவநீதகிருஷ்ணன் , மற்றும் உறுப்பினர்கள் அரவிந்த், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்..

    மதுரை செய்தியாளர்  S.பெரியதுரை




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad