விநாயகர் ஊர்வலம் தடையை பட்டாசு விற்பனையில் கடும் சரிவு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பட்டாசு விற்பனையில் கடும் சரிவு சந்தித்துள்ளது. பல லட்சங்களை மூலதனமாக கொண்டு பட்டாசு வாங்கி விற்பனைக்கு எதிர்பார்த்த நிலையில் அரசு அறிவித்த திடீர் விநாயகர் விழா ஊர்வல தடை அறிவிப்பால் பொது மக்கள் யாரும் பட்டாசு வாங்காத நிலையில் விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. விநாயகர் விழா கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்த நிலையில் விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு தடைவிதித்துள்ளது. இதனால் விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்ட பல லட்ச மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம் அடைந்து விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக கடன் வாங்கியது தான் மிச்சம் என்கின்றனர் பட்டாசு விற்பனை உரிமையாளர்கள்.
கருத்துகள் இல்லை