ஊராட்சியில் கிராமங்களுக்கும் குடி தண்ணீர் கிடைக்க யூனியன் கூடத்தில் அதிகாரிகள் உறுதி
திருவாடானை ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முகமது தலைமையில் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் செப்டம்பர் 2ம் தேதி வியாழ கிழமை இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வரவேற்புரையை ஆணையாளர் பாண்டி கண்ணன் பேசினார். அதனைத் தொடர்ந்து மன்ற பொருள் குறித்த முப்பத்தி ஒன்பது க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில் திருவாடானையில் உள்ள 47 பஞ்சாயத்துகளில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க ஏதுவாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ஏதுவாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அறிக்கைகள் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் மூலமாக தமிழக அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே ஓரிரு மாதங்களில் குடிநீர் பிரச்சனை இல்லாத கிராமமாக உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்தில் நன்றி உரையாக ஆணையாளர் சேவுகப்பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை