Header Ads

  • சற்று முன்

    சின்னகீரமங்கலத்தில் திருவாடானை புதிய தீயணைப்பு துறை நிலையம் திறக்கப்பட்டது

    இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  தீயணைப்பு  மீட்பு பணிகள் நிலையம் பல ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் வாடகை செலுத்தி இயங்கி வந்தது. இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 2019ம் ஆண்டு ரூ. 70.81 லட்சம் செலவில் சின்னகீரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல்  இருந்தது. மேலும் புதிய தீயணைப்பு மீட்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பயன்படுத்த இயலவில்லை எனவே சாலை அமைத்து விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில்  இன்று புதிய நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் ராஜீ ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிலைய அலுவலர், வீரபாண்டி உட்பட தீயணைப்பு துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



    திறக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்திற்கு உள்ளே வரும் பாதை  மிகுந்த மோசமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றனர் இதனால் தீயணைப்பு வாகனத்தை அவசரகாலத்தில் எளிதில் எடுத்துச்  செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே சாலை அமைக்கப் படாதா தீயணைப்பு நிலைய புதிய கட்டிடத்தினை திறந்தும் எவ்வித பயனுமில்லை எனவும் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தீயணைப்பு வாகனம் எளிதில் சென்றுவர புதிய கட்டிடத்தை சுற்றியும் தரமான சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும் வேதனையோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad