Header Ads

  • சற்று முன்

    இலங்கையின் எட்டப்பன் வெங்கடேஸ்வரன்


     உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை மேம்படுத்த  அதன் நட்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்ட பணிகளை தீவிரப்படுத்தி இந்தியாவுக்கு எதிராக திட்டம் தீட்ட பல  கோடி ரூபாய்களை அந்நாட்டில் சீனா  முதலீடு செய்து வருகிறது.

    இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அரசில்  அங்கம் வகிக்கும் முக்கிய உயர் பொறுப்பு வகித்து வரும்  வெங்கடேஷ்வரன் என்பவர் அதிபர் ராஜபக்க்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர் இலங்கை அரசின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாக கூறி  கடந்த ஏப்ரல் 12 ம் தேதி அந்நாட்டு தூதுவராக தென்னிந்தியாவின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்தியாவில் கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

    இதனைத்தொடந்து தமிழகத்திற்கு வருகை தந்த வெங்கடேஷ்வரன் தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவையும் சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

    ஏற்கனவே,  இலங்கையில் சீனா துறைமுகத்தை கட்டமைத்து வருகின்ற இந்நேரத்தில் இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கைக்கூலியாக செயல்படும் வெங்கடேஷ் இந்தியாவை வேவு பார்க்க  இலங்கை தூதராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

    தமிழகத்தில் நடக்கும் பல்வேறு செயல்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை அதிபர் முடிவு செய்து சீனாவின் நட்பு நாடு என்ற முறையில் திட்டங்களை தீட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, மற்றும் காரைக்கால் துறைமுகம், சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது .

    இதனால் இந்த இரண்டு துறைமுகங்களின் கட்டமைப்புகள் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் கைப்பாவையாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால்.

    தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்பதை முழுமையாக சீனாவுக்கு  உளவு சொல்வதற்காகவே இலங்கை தூதராக வெங்கடேஷ்வரன் நியமனம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தற்போது இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த வெங்கடேஷ்வரன் 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகளையும் கொன்று குவித்த சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழின ‌துரோகி தான் இந்த வெங்கடேஷ்வரன்.

    அதேபோல 2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து உணவுகள், உணவு பொருட்கள் வருகின்றன? அவர்களுடைய போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பான ரகசியங்களை இலங்கை ராணுவத்திற்கு அவ்வப்போது தகவல் தந்து தனக்கு தேவையான சன்மானங்களை பெற்று வெங்கடேஷின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும் ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க ராஜபக்க்ஷேவின்  அடிமைகளில் ஒருவரான வெங்கடேஷை தமிழகத்திற்கு உளவு பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார் .

    இந்த நியமனம் தொடர்பான நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட சென்னை இலங்கை தூதரக அதிகாரிகள், இதுவரை இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் Srilanka Foreign Service நியமனம் மூலமே தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக இருந்த போதிலும் ராஜபக்க்ஷே அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    இந்த தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும் Srilanka Foreign Service தகுதி இல்லாத நபரை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷ்வரனை நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் அடங்கியுள்ளது தெரிகிறது. இந்த நியமனம் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு ரகசியங்களை கண்காணிக்க உளவாளியாக அனுப்பியுள்ள வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது.

    சமீபத்தில் திருச்சியில் உள்ள கோத்தகிரி சர்க்கரை ஆலையில்  இலங்கை தூதர் வெங்கடேஷ் நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளார். திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கும் என்ன சம்பந்தம்?திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டது தொடர்பாக இந்தியாவிற்கான இலங்கை தூதர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வ இலங்கை தூதர் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போது இலங்கை ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரில் இந்த நிறுவனத்தை பார்வையிட வந்ததாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் இந்திய நாட்டின் ரகசியங்களை  இலங்கை அரசுக்கு சொல்வதற்காகவே  இலங்கை தூதராக ராஜபக்சேவின் கைக்கூலி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேப்போல் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் வெங்கடேஷ் ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார். 

    முட்டியாரா அனல் மின் நிலையத்திற்கு நேரில் சென்ற வெங்கடேஷ் அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீனாவின் அச்சுறுத்தல் உள்ள நிலையில் சீனாவின் நட்பு நாடான இலங்கையின் துணை உயர் ஆணையர் ஏன் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இப்படி தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று ராணுவ உளவாளியான வெங்கடேஷ்வரன் இங்குள்ள தகவல்களை பெற்று இலங்கைக்கு உளவு சொல்கிறார். அங்கு தகுதியான தமிழர்கள் பலர் இருப்பினும் தகுதியே இல்லாமல்  அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷை நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றனர். 

    இந்தியாவுக்கு எதிராக சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிபர் ராஜபக்சே மூலம் இந்தியாவில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்ள இலங்கை ராணுவ உளவாளியான வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகளை சந்தித்து தமிழக உள்கட்டமைப்பு பணி தகவல்களையும் உளவு பார்த்து இலங்கைக்கு தகவல் அனுப்புவதாக  அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது சீனாவின் கைப்பாவையாக செயல்படும் இலங்கை இந்திய உள்கட்டமைப்பு பணிகளை கண்காணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது சீனா மற்றும் அதன் நட்பு நாடான இலங்கையை நாம் நம்புவது ஏற்புடையதல்லவே 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad